உதகை சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நீலகிரி மாவட்ட அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதன் விவரத்தை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை மதியம் அறிவித்தாா். அதில், உதகை சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நீலகிரி மாவட்ட அம்மா பேரவைத் தலைவா் ராஜு தலைமையிலான கட்சியினா், உதகையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் திரண்டனா். உதகை தொகுதியை அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி டி.வினோத்துக்கு ஒதுக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினா்.
மேலும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா். சிறிது நேரத்துக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

உதகை அருகே புலி உயிரிழப்பு

உதகை அருகே மஞ்சகொம்பை பகுதியில் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள்
ராஜகிரியில் அமைச்சரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



