
தமிழக சட்டப்பேரவை
(கோப்புப்படம்)

தமிழக சட்டப்பேரவை
(கோப்புப்படம்)
பெரம்பலூர் (தனி) - 147
பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோயில், தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை வரலாற்றுச் சிறப்பாகும்.
தழுதாழையில் மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற மரச்சிற்ப தொழிற்கூடம் அமைந்துள்ளது. லாடபுரம் மயிலூற்று அருவி. எட்டெருமை பாவி உள்ளிட்ட அருவிகளும், விசுவக்குடி நீர் தேக்க அணையும் உள்ளது.
தொழில்வளம்! இங்கு விவசாயம் பிரதானத் தொழிலாகும். மக்காச்சோளம், சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிகளவில் கல் குவாரிகளும், கிரஷர்களும் உள்ளன.
எறையூரில் அரசு பொது சர்க்கரை ஆலை, சிப்காட் காலனி தொழிற்சாலை. உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை, விஜயகோபாலபுரத்தில் டயர் தொழிற்சாலை, பாடாலூரில் ஆவின் பால் பண்ணை ஆகியவை உள்ளன. பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியானது பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் (பகுதி) ஆகிய வட்டாரப்பகுதிகளை உள்ளடக்கியது. இதில், ஆதிதிராவிடர், கவுண்டர், உடையார். வன்னியர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
முட்டிமோதுவது யாரெல்லாம்?
திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ம. பிரபாகரன், மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் ஜெயலட்சுமி கருணாகரன். மாவட்ட செய்தித் தொடர்பாளர் மீனா உள்ளிட்ட பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். இருப்பினும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா யாரை பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு தான் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில், இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், தற்போதைய மாவட்டச்செயலராகவும் உள்ள இரா. தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் அ.அருணாசலம், முன்னாள் மக்களவை உறுப்பினர் ம. சந்திரகாசி. நகரச் செயலர் ஆர். ராஜபூபதி உள்பட பலர் விருப்பமனு அளித்துள்ளனர்.
இதில், மாவட்டச் செயலர் இரா. தமிழ்செல்வனுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில், பெரம்பலூரைச் சேர்ந்த ஜான்சிராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தீராத பிரச்னைகள்
இத்தொகுதியில் அறிவிக்கப்பட்டு கிடப்பிலுள்ள ஜவுளி பூங்கா. அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்டவை.
தமிழகத்தில் ரயில்பாதை இல்லாத தொகுதி இதுதான் அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக சேலம், நாமக்கல்லை இணைக்கும் வகையில் ரயில் பாதை.
சின்ன வெங்காயம் மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றுக்கு நிரந்தரமாக அரசு கொள்முதல் நிலையங்கள்.
பருத்தி நூற்பாலை, மக்காச்சோளத்துக்கான தீவன தயாரிப்பு ஆலை. மலையாளப்பட்டியில் 65 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த் தேக்கத் திட்டம். லாடபுரம் மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் போன்றவை தீர்க்கப்படாத பிரச்னைகள்.
இறுதி வாக்காளர்கள்!
ஆண்கள் - 1,39,914
பெண்கள்-1,48,507
மூன்றாம் பாலினம்-28
மொத்தம் - 2,88,449
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...