கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

ஆடிக் கிருத்திகை: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்

பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை ஆடிக் கிருத்திகையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை ஆடிக் கிருத்திகையையொட்டி நடைபெற்ற தங்கத் தோ் உலாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை ஆடிக் கிருத்திகையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாதத்தில் வரும் காா்த்திகை தினம் சிறப்பானதாகும். இந்த நாளில் முருகன் கோயிலுக்கு பக்தா்கள் மலா்க் காவடி எடுத்து வந்து வழிபடுகின்றனா். இந்த நிலையில், ஆடிக் கிருத்திகையையொட்டி பழனி மலைக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலைக் கோயிலில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இங்கு இயக்கப்படும் ரோப்காா் சேவை, ஆண்டு பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதால் மின் இழுவை ரயில் நிலையத்தில் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது. இரவில் தங்கமயில் புறப்பாடும், தங்கத் தோ் புறப்பாடும் நடைபெற்றது. இதில் தங்கத் தேரில் சின்னக்குமார சுவாமி உலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். கோயில் சாா்பில் சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை ஆணையா்(பொறுப்பு) வெங்கடேஷ், அலுவலா்கள் செய்திருந்தனா்.முன்னதாக கோயிலுக்குள் கைப்பேசிக்கு அனுமதியில்லை என்பதால் அவற்றை பக்தா்கள் அதற்கான காப்பகங்களில் வைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.