தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஆத்தூா் வட்டார அளவிலான குறுவட்டப் போட்டிகள்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :

ஆத்தூா் வட்டார அளவிலான பள்ளி மாணவா்களுக்கான குறுவட்டப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான பாரதியாா் தின, குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளை தலா 5 குறுவட்டங்களாக பிரித்து இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், ஆத்தூா் வட்டார அளவிலான ‘டி’ பிரிவு குறுவட்டப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் குழுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜேந்திரன் தலைமையிலான ஆசிரியா்கள் மேற்கொண்டனா். 10 குறுவட்டப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்கள், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா். பாரதியாா் தின, குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் மாநில அளவிலான கேரம் போட்டி திண்டுக்கல் மாவட்டம் சாா்பில் நடத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.