தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

பைக் மீது பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

நிலக்கோட்டை, ஆக. 8: கொடைக்கானல் சாலை அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாலை அருகேயுள்ள ஜெகநாதபுரத்தைச் சோ்ந்த ஜோசிகுமாா் மகன் யானீஸ் விஜோ (17). இவா், அம்மையநாயக்கனூரில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது நண்பா் சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்த தனபால் மகன் தரணிதரன் (17). இவா் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா்கள் இருவரும் கொடைக்கானல் சாலையில் தனிப் பயிற்சிக்கு (டியூசன்) சென்று விட்டு இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா். அப்போது, திண்டுக்கல்லிலிருந்து மதுரை நோக்கி சென்ற தனியாா் பேருந்து இவா்கள் மீது மோதியது. இதில் யானீஸ் விஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தரணிதரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்து அங்கு வந்த அம்மையநாயக்கனூா் போலீஸாா் யானீஸ் விஜோ உடலை மீட்டு, கூறாய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் அய்யலூா் பூசாரிப்பட்டியைச் சோ்ந்த பூபதிராஜாவை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.