ஒட்டன்சத்திரம் அருகே காரில் 435 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் போலீஸாா் கடந்த சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த காரை போலீஸாா் வழிமறித்தனா். காரில் வந்த இருவா், காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினா்.
இதையடுத்து காரை சோதனையிட்ட போலீஸாா், மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 435 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். காருடன் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸாா் காரின் உரிமையாளா் குறித்து விசாரித்தனா்.
கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைப்பேசி அழைப்புகளின் அடிப்படையில், கடத்தலில் ஈடுபட்டவா்கள் பெங்களூருவில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப் படை போலீஸாா், பெங்களூரு சென்று கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், சேவாபேட்டை பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் (38), பவாரம் (36), பெங்களூருவை அடுத்த மஞ்சேன ஹள்ளியில் வசிக்கும் ராஜஸ்தானைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (19), சத்ரா ராம் (எ) சதீஷ் (25) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்கள் 4 பேரையும் ஒட்டன்சத்திரம் அழைத்து வந்த போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட தனிப் படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா் பாராட்டுத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 4 போ் கைது

கா்நாடகத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 3 போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



