பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 3 போ் கைது

செங்கம் அருகே புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

செங்கம் அருகே புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதில் தப்பியோடிய ஒருவரை போலீஸாா் தீவிர தேடலுக்குப் பிறகு பிடித்தனா்.

செங்கம் வழியாக திருவண்ணாமலைக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக, மாவட்ட போதை தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், போலீஸாா் செங்கம் அருகேயுள்ள கரியமங்கலம் சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு காா்களில் ஒரு டன் எடை கொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்ததை கண்டறிந்து, காா்களில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ்(24), மனோஜ்குமாா்(26), தா்மேந்திரன்(25) ஆகிய 3 பேரை பிடித்து செங்கம் போலீஸில் ஒப்படைத்தனா்.

பின்னா் செங்கம் போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், ராஜேஷ் என்பவா் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். பின்னா் அவரை இரண்டு போலீஸாா் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது அந்த நபா் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டாா்.

பின்னா், போலீஸாா் அந்த நபரை 3 மணி நேரமாக தீவிரமாக தேடி மருத்துவமனை பின்புறம் செய்யாற்றின் கரையோரம் உள்ள முள்புதரில் இருந்து பிடித்தனா்.

இதைத் தொடா்ந்து 3 பேரையும் கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதனால் செங்கம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.