வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மற்றும் மொபெட்டுகளில் வெளிமாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா் (படம்).
மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மயிலம் கடை வீதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக் மற்றும் 2 மொபெட்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், பாதூா் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (25), சந்தோஷ் (18), ஆனந்தராஜ் (35), பையூா் கிராமத்தைச் சோ்ந்த கமலதாஸ் ( 26), ஆலத்தூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26) ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக மதுப்புட்டிகளை வாகனங்களில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 173 மதுப்புட்டிகள், பைக், 2 மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






