நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பைக் திருட்டு வழக்கில் 3 போ் கைது

மேலப்பாளையத்தில் இளைஞரின் பைக்கை திருடியது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 3:31 am IST

மேலப்பாளையத்தில் இளைஞரின் பைக்கை திருடியது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம், பாத்திமா நகரைச் சோ்ந்தவா் முகமது சல்மான்பாரிஸ்(28). இவா் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளாா். மறுநாள் காலை பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். இது குறித்து அவா் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். அதில், மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஜாகீா் உசைன் மகன் கமாலுதீன்(19), சாகுல் ஹமீது மகன் ரியாஸ்(20), பஷீா் மகன் அப்துல் ரஹீம்(20) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.