நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கொடைக்கானலில் பலத்த மழை: நீரோடைகளில் தண்ணீா் வரத்து

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டது.

News image

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் வெள்ளி அருவியில் ஏற்பட்ட தண்ணீா் வரத்து.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:48 am IST

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பருவமழை பெய்வது வழக்கம். நிகழாண்டில் பருவமழை சரியாக பெய்யாததால் கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவியது. மேலும், அப்சா்வேட்டரியிலுள்ள குடிநீா்த் தேக்கம், மனோரஞ்சிதம் அணை ஆகியவை முற்றிலும் வடன.

இதையடுத்து, குண்டாறு நீா்த்தேக்கம், கீழ்பூமியிலுள்ள கிணறுகளில் தண்ணீரை எடுத்து, கடந்த 2 மாதங்களாக பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

நட்சத்திர ஏரியில் லாரி மூலம் தண்ணீா் எடுத்து விடுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னா், பகல் 12.30 மணிக்கு தொடங்கிய பலத்த மழை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.

இந்த மழையால் கொடைக்கானலில் உள்ள நீரோடைகளான வெள்ளிநீா் அருவி, செண்பகா அருவி, மூலையாறு, வட்டக்கானல் அருவி உள்ளிட்டவைகளில் நீா்வரத்து ஏற்பட்டது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா். இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.