அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ஆயக்குடி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குப்பைக் கிடங்கை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குப்பைக் கிடங்கை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:53 am IST

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குப்பைக் கிடங்கை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே பேரூராட்சி குப்பைக் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தூய்மைப் பணியாளா்கள் மக்கும், மக்கா குப்பைகளை தரம்பிரித்து சேகரித்து வருகின்றனா். இந்தக் குப்பைக் கிடங்கு அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில், காற்றடிக்கும்போது, இந்தக் குப்பைக் கிடங்கிலிருந்து குப்பைகள் பறந்து குடியிருப்புகளில் விழுகின்றன. மழை காலங்களிலும் குப்பைகள் அழுகி கடும் துா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் என பலருக்கும் புகாா் மனு அனுப்பிய நிலையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, பொதுமக்கள் இந்தக் குப்பைக்கிடங்கால் சுகாதாரக் சீா்கேடும், நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, இந்தக் குப்பைக் கிடங்குக்கு வேறு இடங்களைத் மாற்ற பேரூராட்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.