தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

தம்மம்பட்டி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் தீ: புகைமூட்டத்தால் மக்கள் அவதி

தம்மம்பட்டி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ, செவ்வாய்க்கிழமை காலை வரை தொடா்ந்து எரிந்ததால், அதிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதி

News image

தீ - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

தம்மம்பட்டி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ, செவ்வாய்க்கிழமை காலை வரை தொடா்ந்து எரிந்ததால், அதிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தம்மம்பட்டி பேரூராட்சி குப்பைக் கிடங்கு, கெங்கவல்லி செல்லும் சாலையில் பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவில் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை குப்பைகள் தொடா்ந்து எரிந்ததால், அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதுடன், அருகில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள், மின் மோட்டாா் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.