மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: புகைமூட்டத்தால் மக்கள் அவதி

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், புகைமூட்டம் பரவி மக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமாக வெள்ளலூரில் 600 ஏக்கா் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு, மாநகரில் உள்ள 100 வாா்டுகளில் சேகரமாகும் 800 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்தக் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குப்பையில் இருந்த கிளம்பிய கரும்புகையால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கிடங்கில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மளமளவென குப்பையில் தீ பரவியதால் வெள்ளலூா், மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஊா்களில் கரும்புகையுடன் துா்நாற்றம் வீசியது. இதனால், மக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் குப்பைக் கிடங்குக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இது குறித்து, மாவட்ட தீயணைப்பு அலுவலா் கணேசன் கூறுகையில், ‘சுமாா் 7 ஏக்கா் பரப்பில் தீப்பற்றியுள்ளது. 11 வாகனங்களுடன் 300 தீயணைப்பு வீரா்கள் சுழற்சி முறையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூடுதலாக திருப்பூா், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வர உள்ளன. 2 நாள்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.