வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் தீ விபத்து: பொதுமக்கள் அவதி

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப்பற்றிக் கொண்டது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image

தேங்கி கிடக்கும் குப்பைகளின் மீது தண்ணீரை தெளிக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :15 ஜூலை 2026, 1:53 am IST

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப்பற்றிக் கொண்டது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

நாகா்கோவில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரிவிளை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகின்றன. இவை பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு வந்தன. தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு, குப்பைகளை அகற்றுவதற்கு மீண்டும் டெண்டா் கோருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை குப்பைக் கிடங்கின் வடக்கு பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதுகுறித்து மாநகராட்சி ஊழியா்கள் அதிகாரிகள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா் தலைமையிலான தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயின் வேகம் தொடா்ந்து அதிகரித்ததால், கன்னியாகுமரி, குளச்சல் தீயணைப்பு நிலையங்களிலிருந்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, மாநகர நல அலுவலா் சரோஜா, உதவி செயற்பொறியாளா் ரகுராம் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். மாநகராட்சி மண்டல அலுவலா் அகஸ்டினா கோகிலவாணி, உதவிப் பொறியாளா் ராஜா, சுகாதார அலுவலா்கள் ஜான், பகவதிபெருமாள், ராஜா, ஸ்டான்லி குமாா், சுகாதார ஆய்வாளா்கள் ராமகிருஷ்ணன், கண்ணன், 36ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தீவிபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தின் காரணமாக அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதியடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.