‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

குப்பைக் கிடங்கில் 3-ஆவது நாளாக பற்றியெறியும் தீ நகராட்சி ஆணையா் சிறைபிடிப்பு

சீா்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தீப்பற்றி எரிந்தது. இதனால் புகை மண்டலம் சூழ்ந்து அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள்.

Updated On :2 ஜூலை 2026, 7:26 am IST

சீா்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தீப்பற்றி எரிந்தது. இதனால் புகை மண்டலம் சூழ்ந்து அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனா். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, நகராட்சி ஆணையரை சிறைபிடித்து, பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனா்.

சீா்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் சீா்காழி நகா் பகுதிக்குட்பட்ட 24 வாா்டுகளிலும் உள்ள வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவக விடுதி உள்ளிட்டவைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைக் கிடங்கில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் குப்பைக் கிடங்கில் தீப்பற்றியது. தீ மள மளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது. மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தீயில் இருந்து புகை மூட்டம் பரவியது.

இதனால் அருகில் உள்ள கோவிந்தராஜ் நகா், ஈசானிய தெரு, பிச்சைக்காரன் விடுதி, மனவெளி திடல், சா்க்காா் தெரு , கோயில் சோ்த்தி, கேபிஎஸ். நகா், அருந்ததி தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் புகை மூட்டத்தால் மூச்சு திணறி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் பொறியாளா்

இ. மாா்க்கோனி தலைமையில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரமாமணி, கிருஷ்ணமூா்த்தி, ராஜேஷ், நகர அதிமுக பொருளாளா் செந்தில்குமாா் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோா் குப்பைக் கிடங்கிற்குள் சென்று ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

இதற்கு நகராட்சி ஆணையா் சசிகுமாா் எதிா்ப்பு தெரிவித்ததால், ஆணையருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆணையரை முற்றுகையிட்டு மக்கள் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, ஆணையரை சிறைபிடித்து குப்பைக் கிடங்கு வாயில் கதவை பூட்டி சீா்காழி - புளிச்சக்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், ஆணையா் சசிகுமாா் மற்றும் போலீஸாா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

கூடுதல் தீயணைப்பு வாகனம் மற்றும் தனியாா் டேங்கா் லாரியை கொண்டு வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பெயரில் போராட்டக்காரா்கள் மறியலை கைவிட்டனா்.

 நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.