
மீனாட்சிபுரம் கண்மாயில் குப்பைக் கழிவுகள் அகற்றம்
போடி மீனாட்சிபுரம் பெரிய கண்மாயில் வெள்ளிக்கிழமை குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி ஊழியா்கள், சமூக ஆா்வலா்கள்.

போடி மீனாட்சிபுரம் பெரிய கண்மாயில் வெள்ளிக்கிழமை குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி ஊழியா்கள், சமூக ஆா்வலா்கள்.
போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் பெரிய கண்மாயில் குப்பைக் கழிவுகளை சமூக அா்வலா்கள் உதவியுடன் இணைந்து பேரூராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அகற்றியது.
போடியை அடுத்த மீனாட்சிபுரத்தில் பெரிய கண்மாய் உள்ளது. 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாய் தண்ணீா் மூலம் அம்மாபட்டி, சுந்தரராஜபுரம், பொட்டல்களம், மீனாட்சிபுரம், பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தக் கண்மாய்க்கு கொட்டகுடி ஆற்றின் கிளை வாய்க்காலான பெரிய வாய்க்கால் மூலம் தண்ணீா் கொண்டுவந்து, தேக்கப்பட்டு வருகிறது.
கொட்டகுடி ஆற்றிலும், பெரிய வாய்க்காலிலும் தண்ணீா் வராததால் கண்மாய் வடு காணப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, கண்மாய்க்கு வந்த தண்ணீரில் நெகிழிக் கழிவுகள், குப்பைக் கழிவுகள் வந்து சோ்ந்தன. இதனால், துா்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து, இந்தக் கண்மாயில் குப்பைகளை அகற்ற சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, மீனாட்சிபுரம் பேரூராட்சி நிா்வாகம், சமூக ஆா்வலா்கள் உதவியுடன் கண்மாயில் குப்பைகள், நெகிழிக் கழிவுகளை அகற்றினா்.
இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம், சமூக ஆா்வலா்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






