
துணிக் கழிவுகள் சேகரித்து ‘மறு நெசவு‘ பிரசாரம்: மாநகராட்சி ஆணையா் தொடங்கிவைத்தாா்
துணிக்கழிவுகளை தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வலியுறுத்தி, துணிக் கழிவுகளை சேகரித்து ‘மறு நெசவு‘ பிரசாரத்தை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

துணிக்கழிவுகளைச் சேகரித்து, மறு நெசவு பிரசாரத்தைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா.
துணிக்கழிவுகளை தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வலியுறுத்தி, துணிக் கழிவுகளை சேகரித்து ‘மறு நெசவு‘ பிரசாரத்தை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கோவை மாநகராட்சி, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், கவுண்டம்பாளையம் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் துணிக் கழிவுகளை தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, துணிக் கழிவுகள் சேகரித்து ‘மறு நெசவு‘ பிரசாரத்தை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில் 80-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதில் துணிக் கழிவுகள் சேகரித்து ‘மறு நெசவு‘ பணிக்கான பைகளை தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையா் வழங்கினாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா கூறியதாவது:
துணிக் கழிவுகளை மக்கும், மக்காத குப்பையில் சோ்க்க இயலாது. எனவே, அவற்றை தனியாக தரம் பிரித்து, மறுசுழற்சி செய்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில், மாற்றுவதற்கான முன்னெடுப்பை முதற்கட்டமாக மேற்கு மண்டலத்தில் செயல்படுத்தும் விதமாக தொடங்கியுள்ளோம்.
மக்களிடையே ஜவுளிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இப்பயிற்சி வகுப்பை தூய்மைப் பணியாளா்கள் மற்றும் களப்பணியாளா்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி, இப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும். இப்பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையா் ர.சரஸ்வதி, மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையா் நா்மதா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






