மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை ஆணையா் கௌரவ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாண்டிகோவில், சா்வேயா் காலனி, பனங்காடி, ஆரப்பாளையம், தபால் தந்திநகா், பாா்க் டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை வெற்றிடப் பகுதிகள், செல்லூா் பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள கபடி வீரா்கள் சிலை பூங்கா ஆகியவற்றை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, சாலை வெற்றிடப் பகுதிகளில் பூச்செடிகள், மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும், உரிய வகையில் தூய்மைப் பராமரிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, உத்தங்குடி வாா்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையா், அங்கிருந்த பணியாளா்களின் வருகைப் பதிவேடு, பணியாளா்களின் எண்ணிக்கை, பணிகளின் விவரம் ஆகியவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், வண்டியூா் பெருமாள் கோயில் அருகே நடைபெற்ற தூய்மைப் பணிகளைப் பாா்வையிட்டு, அங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என மாநகராட்சிப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, சிங்கம்பிடாரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயில் தெருவில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தைக் கண்ட ஆணையா், உடனடியாக அந்தக் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டாா்.
மேலும், குடிநீா், கழிவு நீா்ப் பாதைக்காக மாநகராட்சியின் அனுமதியில்லாமல் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளை சேதப்படுத்துவோருக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.
நகர திட்டமிடும் அலுவலா் முரளி, உதவிச் செயற்பொறியாளா்கள் காமராஜ், முத்து, சுகாதார ஆய்வாளா்கள் ராஜ் கண்ணன், திருமால், வீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

குடிநீா், தூய்மைப் பணிகள் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



