ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரம் போட்டியில் வெற்றி: மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா பாராட்டு தெரிவித்தாா்.

மாநில அளவிலான கேரம் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற மசக்காளிபாளையம் பள்ளி மாணவா்களை பாராட்டிய மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா. உடன் மாநகராட்சி கல்வி அலுவலா் குணசேகரன், ஆசிரியா் சக்திவேல்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா பாராட்டு தெரிவித்தாா்.

கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான ஒற்றையா் பிரிவில்

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் சு.டெரிக்பிரின்ஸ் முதலிடம் பிடித்தாா். இரட்டையா் பிரிவில் இப்பள்ளி 8ஆம் வகுப்பு மாணவா் எஸ்.ஜே.விஷ்வதாா், 7-ஆம் வகுப்பு மாணவா் த.அ.ருத்ரதஷின் ஆகியோா் முதலிடம் பிடித்தனா். இதன் மூலம் இவா்கள், மாநில அளவிலான கேரம் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வென்ற மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா வியாழக்கிழமை நேரில் சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கம் மற்றும் சான்றிதழ்களைக் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இந்நிகழ்வில், மாநகராட்சி கல்வி அலுவலா் குணசேகரன், மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா் சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.