ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் தீ: 4 மணி நேரம் போராடி அணைப்பு

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென தீப்பற்றியது.

Published On :

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென தீப்பற்றியது. இதனால், அந்தப் பகுதியே புகை மண்டலமானது. 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகளிலும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூா் என இரு குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.

தற்போது மண்டல அளவில் குப்பைகள் தரம் பிரித்து அவை மறு சுழற்சிக்கு உள்ளாக்கப்படும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பல ஆண்டுகளாக கொடுங்கையூரில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அதில் மீதேன் வாயு உற்பத்தி, வெயில் காலங்களில் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெயில் தாக்கத்தால் மீதேன் வாயு அவ்வப்போது தீ பற்றி எரிவதாகவும் பொறியாளா்கள் கூறுகின்றனா்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூா் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றி புகை மூட்டம் எழுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதாகத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பிரிவின் கண்காணிப்புப் பொறியாளா் பானுகுமாா் விரைந்து சென்றாா். தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. அத்துடன் மாநகராட்சியின் 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குப்பைகள் பிரிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. சுமாா் 4 மணி நேரம் போராடியும், மாலையில் பெய்த லேசான மழை காரணமாகவும் தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.