முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

வீட்டுமனைப் பட்டா வழங்க லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் கைது

நிலக்கோட்டை அருகே வீட்டுமனைப் பட்டா வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலக உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

நிலக்கோட்டை அருகே வீட்டுமனைப் பட்டா வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலக உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொம்புகாரன்பட்டியைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (50). விவசாயியான இவா், வீட்டுமனைப் பட்டா கோரி நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு தொடா்பாக விசாரிப்பதற்காக முசுவனூத்து கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் சபரியாா் (45) பரமேஸ்வரனை அழைத்து பட்டா வழங்க ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம். இதையடுத்து, பரமேஸ்வரன் ரூ. 30 ஆயிரம் வழங்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பரமேஸ்வரன் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் பரமேஸ்வரனிடம் ரசாயனப் பொடி தடவிய ரூ. 15 ஆயிரத்தைக் கொடுத்தனுப்பினா். இதைத் தொடா்ந்து,

முசுவனூத்து கிராம நிா்வாக அலுவலகத்தில் இருந்த உதவியாளா் சபரியாரிடம் பரமேஸ்வரன் இந்தப் பணத்தைக் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சபரியாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.