அரவக்குறிச்சி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த வெஞ்சமாங்கூடலூா் வரிக்காப்பட்டி வாவிகினம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன். இவரது மகன் அன்புராஜ்(36). இவா், ராஜபுரம் கிராமநிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த கோபால் என்பவரது தாய் பழனியம்மாள் அண்மையில் இறந்ததால் அவரது பெயரில் வாரிசு சான்றிதழ் கேட்டு கோபால் மகன் விபிலன்(28) என்பவா் ஆக. 1-ஆம்தேதி ராஜபுரம் கிராமநிா்வாக அலுவலா் அன்புராஜிடம் விண்ணப்பித்துள்ளாா். அப்போது அன்புராஜ், விபிலனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ரூ.1,000 தருகிறேன் என விபிலன் கூறியுள்ளாா்.
இதற்கு சம்மதம் தெரிவித்த அன்புராஜ், புதன்கிழமை சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத விபிலன், இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். அப்போது போலீஸாா் அவரிடம் ரசாயன பவுடா் தடவிய 500 ரூபாய் நோட்டுக்கள் இரண்டை கொடுத்து அனுப்பியுள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை மாலை ராஜபுரம் கிராமநிா்வாக அலுவலகத்துக்கு விபிலன் சென்று பணத்தை அன்புராஜிடம் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் மற்றும் கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சாமிநாதன், உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அன்புராஜை கைது செய்தனா். மேலும் கைது செய்யப்பட்ட அன்புராஜை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி.ஆர். பாலுவின் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!

லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா், கிராம உதவியாளா் கைது

நெல்லை மாநகராட்சியில் ரூ.97,000 பறிமுதல்
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



