தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

டி.ஆர். பாலுவின் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!

டி. ஆர். பாலுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸார் சோதனை நடத்துவது பற்றி..

T.R. Baalu's liquor factory Surprise raid

கோல்டன் வாட்ஸ் மது ஆலை முன் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள போலீஸார் - file photo

Published On :

மன்னார்குடியில் திமுக எம்பி டி. ஆர். பாலுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூரில் அமைந்துள்ள திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர். பாலுக்குச் சொந்தமான கோல்டன் வாட்ஸ் என்ற மதுபான ஆலை உள்ளது. இந்த ஆலையில், புதன்கிழமை காலை முதல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 41 இடங்களில் மதுபான ஆலைகளில் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் முடிவில் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா என்ற விவரம் தெரியவரும். மதுபான ஆலையில் தற்போது நடைபெற்று வரும் சோதனை தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த பகுதியில், மன்னார்குடி நகர மற்றும் ஊரக காவல் நிலைய போலீஸார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Regarding the raid conducted by the Anti-Corruption and Vigilance police on the liquor factory owned by T. R. Baalu...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.