தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் சிக்கன் பிரியாணி சேர்க்கப்படுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சத்துணவுகளில் மதிய உணவு சமைத்து பள்ளியிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.
அரசுப் பள்ளிகளுக்கு வரும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு படிப்புடன் உரிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்யும் வகையில், நாள்தோறும் முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டங்களை முன்னுதாரணமாக கொண்டு பல மாநில அரசுகள் இத்திட்டத்தை அவர்களின் மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், தமிழகத்திலுள்ள அனைத்து ஆசிரியா் சங்கங்கள், ஆசிரியரல்லாத பணியாளா் சங்கங்களின் நிா்வாகிகளுடன் அமைச்சா் ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.
அப்போது மதிய உணவுத் திட்டத்தில் வாரத்தில் ஒருமுறை மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சருக்கு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மதிய உணவுத் திட்டத்தில் சிக்கன் பிரியாணி சேர்ப்பது தொடர்பான கோரிக்கை தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பாக துறை ரீதியிலான ஆய்வு நடத்தப்பட்டு, விரைவில் முதல்வர் ஜோசப் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பள்ளி சத்துணவுகளில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Chicken Biryani in Government School Midday Meals - Minister Rajmohan Clarifies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!

சாலை என்பது போராடக்கூடிய இடமல்ல: அமைச்சர் ராஜ்மோகன் | Minister Rajmohan |

சமணர் படுகையில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு | TVK

மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்
விடியோக்கள்

இரவில் தொடர் மின்வெட்டு: ஊழியர்கள் சிறைபிடிப்பு! | Power Cut |




