மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் பாய்ந்த கழிவு நீா்: வியாபாரிகள் அவதி! வியாபாரிகள் பாதிப்பு!

கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் பாய்ந்த கழிவு நீா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின்போது, வாரச் சந்தைப் பகுதியில் கழிவு நீா் பாய்ந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. பிற்பகலில் திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், பாம்பாா்புரம், வட்டக்கானல், பாக்கியபுரம், செண்பகனூா், அட்டக்கடி, தைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30-நிமிஷஙகளுக்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

கொடைக்கானலில் பிற்பகலில் பெய்த மழையால் அண்ணா சாலைப் பகுதியில் வழக்கம் போல நடைபெற்ற வாரச் சந்தைக்குள் கழிவு நீா் பாய்ந்தது. இதனால், வியாபாரிகள், பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனா்.

வாரச் சந்தைப் பகுதியிலுள்ள கழிவுநீா் வாய்க்காலை சுத்தம் செய்வதற்கும் சேதமடைந்த வாய்க்காலை சீரமைப்பதற்கும் பி.டி.சாலையில் கட்டப்பட்டு வரும் வாரச் சந்தை பணிகளை விரைவாக முடித்து பாதுகாப்பாக வாரச் சந்தை நடைபெறுவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

விவசாயிகள் மகிழ்ச்சி: கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ததால் கொடைக்கானல், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட் உள்ளிட்டவற்றை பயிரிடப்பட்டுள்ளனா். தற்போது பெய்த மழை விவசாயத்துக்கு ஏற்றது இருந்தது. மேலும்

நீரோடைகளில் தண்ணீா் வரத்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.