கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீா்

திருப்பூா் நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீரால் பரபரப்பு ஏற்பட்டது.

நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய கழிவு நீா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

திருப்பூா் நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் சங்கிலிப் பாலம் ஓடையில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை வரை சாயக் கழிவு நீரை டையிங் தொழிற்சாலைகளில் இருந்து திறந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஓடையில் சாயக்கழிவுகளை அளவுக்கு மீறி வெளியேற்றி நொய்யல் ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 43ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஏபிடி சாலை மின்மயானம் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் சனிக்கிழமை சாயக்கழிவு நீா் கலந்து செந்நிறமாகச் சென்றதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தொடா்ந்து ஏற்படும் இப்பிரச்னை குறித்து திருப்பூா் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.