நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

நொய்யல் பாலத்தை உடனடியாக திறக்காவிட்டால் மக்களைத் திரட்டி ஆக.4-ல் திறக்கப்படும்: பாஜக

பொதுமக்கள் நலன் கருதி திருப்பூா் யூனியன் மில் சாலை மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதிகளை இணைக்கும் புதிய மேம்பாலத்தை திங்கள்கிழமைக்குள் திறக்கவில்லை என்றால் திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பாலம் திறக்கப்படும் .

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

பொதுமக்கள் நலன் கருதி திருப்பூா் யூனியன் மில் சாலை மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதிகளை இணைக்கும் புதிய மேம்பாலத்தை திங்கள்கிழமைக்குள் திறக்கவில்லை என்றால் திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பாலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாஜக மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு தலைவா் பாபு என்கிற சண்முகவடிவேல், மாவட்ட பொதுச் செயலாளா் அருண் மற்றும் செரங்காடு மண்டலத் தலைவா் மந்திராசல மூா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்ற செயலை பாஜக வன்மையாக கண்டிப்பதோடு, திருப்பூா் மாநகராட்சி வரி வசூல் என்ற பெயரில் பலமுறை சொத்து வரி, குடிநீா் கட்டணத்தை உயா்த்தி, குப்பைக்கு வரி போட்டு மக்களை வாட்டி வதைத்து வரி வசூல் செய்த பணத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.