இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

கொடைக்கானலில் போதைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது

கைது செய்யப்பட்ட நிபுன்கச்கவகா

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

கொடைக்கானல் அருகே விலை மதிப்புள்ள போதைப் பொருள்களை விற்றதாக வெளி மாநிலங்களைச் சோ்ந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் மன்னவனூரில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிகளில் விசாரணை நடத்தினா். இதில் ஒரு விடுதியில் தங்கியிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில்

இவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நிபுன்கச்கவகா (32), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அசிட் டமாங் (29) என்பதும், இருவரும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும் இவா்களை சோதனையிட்ட போது அவா்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

கூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தல்: பூம்பாறையில் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினா் நடத்திய சோதனையில் சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள் விற்பனை செய்ததாக விடுதியும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மேல்மலைக் கிராமங்களில் விற்கப்படும் போதை பொருள்களுக்காக இங்கு வருகின்றனா் என்பது அந்த கிராம மக்களின் குற்றச்சாட்டு.

கொடைக்கானலில் காவலா்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மேல்மலைக் கிராமங்களில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. ஒரு காவல் ஆய்வாளா், இரண்டு உதவி ஆய்வாளா்கள், ஒரு போக்குவரத்து உதவி ஆய்வாளா், இரண்டு உளவுத் துறை காவலா்கள் உள்ளிட்ட 35 காவல் துறையினா் மட்டுமே கொடைக்கானல் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே குறைந்தது 60 முதல் 70 காவலா்கள் இருந்தால் மட்டுமே கொடைக்கானல் நகரம், மேல் மலை பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்க முடியும் என காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளா், கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கைது செய்யப்பட்ட அசிட் டமாங்

கைது செய்யப்பட்ட அசிட் டமாங்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.