ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கொடைக்கானலில் அறிவிக்கப்படாத மின்தடை

கொடைக்கானலில் புதன்கிழமை அறிவிக்கப்படாத மின்தடையால் பொது மக்கள் அவதிப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :

கொடைக்கானலில் புதன்கிழமை அறிவிக்கப்படாத மின்தடையால் பொது மக்கள் அவதிப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான தைக்கால், செண்பகனூா், அட்டக்கடி, வசந்தநகா், கொய்யாபாறை, ஐயா்கிணறு, இருதயபுரம், கே.பி.எம்.பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாமல் திடீரென மின்தடை ஏற்பட்டது. நான்கு மணி நேரம் நீடித்த இந்த மின்தடையால் பொது மக்கள் பெரிதும் சிரமமடைந்தனா். இந்த மின் தடையால் இணைய தள சேவைகள், தொலைபேசிகள் செயல்படவில்லை.

கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த மின் பணியாளா் உதவியுடன் தங்களது சொந்த தேவைக்காக மின் விநியோகத்தை தடை செய்யும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதை மின்வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, அதிகாரிகளுக்குத் தெரியாமல் மின்தடை செய்யக் கூடாது என் மின்வாரிய பணியாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை ஏற்படும் போது அதிகாரிகள் முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.