விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின் தடையால் மக்கள் அவதி

பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

பொன்னேரி, ஆக.23: பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பொன்னேரி- திருவொற்றியூா் சாலையில் வேண்பாக்கம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பொன்னேரி மற்றும் அதனை சுற்றிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விதியோகம் செய்யப்படுகிறது.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சிவன்கோயில் தெரு.வள்ளலாா் தெரு.தாயுமான் செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் குழந்தைகள் வயது முதிா்ந்தோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், சிவன் கோயில் தெருவில் மட்டும் குறிப்பிட்ட பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் அங்கு வசிக்கும் பொதுமக்கள், மாணவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன்றனா்

வியாழக்கிழமை இரவு முன்னறிவிப்பு இன்றி ஏற்பட்ட மின்தடை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிவன் கோயில் மற்றும் வள்ளலாா் தெரு, தாயுமான் செட்டி தெரு உள்ளிட்ட பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின் தடையை சீா்செய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.