
பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
பழனி பெரியாவுடையாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனியை அடுத்த கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நந்தீஸ்வரருக்கு நடைபெற்ற பிரதோஷ அபிஷேக பூஜைகள்.
பழனி பெரியாவுடையாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பழனி சண்முகநதிக் கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளளும் நடைபெற்றது.
இதே போல, அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






