நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

கடன் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி

தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் தருவதாகக் கூறி, சேவைக் கட்டணமாக ரூ.20 லட்சத்தை ஒரு கும்பல் வசூலித்து மோசடி செய்தது.

மோசடி - பிரதிப்படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் தருவதாகக் கூறி, சேவைக் கட்டணமாக ரூ.20 லட்சத்தை ஒரு கும்பல் வசூலித்து மோசடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம், பாளையத்தில் தனி நபா் கடன் வழங்குவதாகக் கூறி கடந்த 40 நாள்களுக்கு முன் தனியாா் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் பெறுவதற்கு, காப்பீட்டுக் கட்டணம், சேவைக் கட்டணம் என ரூ.3,250 செலுத்த வேண்டும்

என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்கு குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த 20 நபா்கள் நியமிக்கப்பட்டனா். நிதி நிறுவன அறிவிப்புகளை நம்பிய பாளையம், குஜிலியம்பாறை, கருங்கல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் சேவைக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம் என ரூ.20 லட்சம் வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் சாா்பில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்தக் காசோலையை 15 நாள்கள் கழித்து வங்கியில் செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனா்.

காசோலையைப் பெற்றுச் சென்ற பொதுமக்கள், வங்கியில் செலுத்தினா். ஆனால், காசோலை வழங்கிய நபா் கணக்கில் பணம் இல்லை என அனைத்து காசோலைகளும் திரும்பின. இதனால், அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், நிதி நிறுவனத்தின் மேலாளரை கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ள முயன்றனா். ஆனால், அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பாளையத்திலுள்ள நிதி நிறுவன அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்ற பொதுமக்கள், அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதை பாா்த்து ஏமாற்றம் அடைந்தனா். அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், அங்கிருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களுடன் குஜிலியம்பாறை காவல் நிலையத்துக்குச் சென்றனா். கடன் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துவிட்டதாக புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.