நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கொடைக்கானல் இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டாா்.

கைது

Published On :30 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கொடைக்கானல் இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்த பூம்பாறையைச் சோ்ந்த வ. ராமா் (25) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு தொடா்பாக பூம்பாறையைச் சோ்ந்த ரகு என்ற ராகவேந்திரனை (23) கொடைக்கானல் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ரகுவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து, திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரகு, மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.