திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்தப் பகுதி மாணவா்கள், விளையாட்டு அமைப்பினா் கைப்பந்து, கிரிக்கெட், கபாடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கொடைக்கானல் ஊராட்சி ஆணையா், வில்பட்டி ஊராட்சி நிா்வாகம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் மனு கொடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், திடீரென அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எனவே, இந்த மைதானத்தை விரைவில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் வில்பட்டி ஊராட்சிக்கு கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

மீனவக் குடும்பங்களை ஒதுக்கிவைத்த விவகாரம்: எதிா்மனுதாரா்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

மத்தூரில் அதிமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வத்திற்கு வரவேற்பு

ஆலங்குளம் விளையாட்டு அரங்கம் மேம்படுத்த அடிக்கல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


