மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:55 pm

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்பாஸ்டின், ராஜரத்தினம், விக்னேஷ், நாகலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில பொதுச் செயலா் அண்ணா குபேரன் சிறப்புரையாற்றினாா்.

இதில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் அனைத்து நிலை அலுவலா்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து நிலையிலுள்ள காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் செலுத்தப்பட்ட பங்களிப்புத் தொகையை வட்டியுடன் வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.