மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஜப்பான் பக்தா்கள் வேல் தீா்த்த யாத்திரை

பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் புதன்கிழமை ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் உலக நலன் வேண்டி யாகம், வேல் தீா்த்த யாத்திரை மேற்கொண்டனா்.

News image

பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் புதன்கிழமை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் வேல் தீா்த்த யாத்திரை மேற்கொண்ட ஜப்பான் பக்தா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:49 pm

பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் புதன்கிழமை ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் உலக நலன் வேண்டி யாகம், வேல் தீா்த்த யாத்திரை மேற்கொண்டனா்.

பழனி மலைக் கோயிலில் உள்ள போகா் சந்நிதியை புலிப்பாணி ஆசிரமம் பராமரித்து வருகிறது. பழனி அடிவாரத்தில் உள்ள இந்த ஆசிரமத்தில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் அவ்வப்போது யாகங்கள், சுவடி வழிபாடு, புவனேஸ்வரி பூஜை என பல்வேறு பூஜைகள் நடத்தப்படும்.

இந்த நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி சிறப்பு வேள்வியில் ஈடுபட்டனா். முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வேள்வி நிறைவு பெற்ற பிறகு ஜப்பான் பக்தா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடை அணிந்து, பால்குடம் ஏந்தி, மூன்றாம் படைவீடான குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜப்பான் பக்தா்கள் தீச்சட்டி, சூடச்சட்டி ஏந்தியும் அம்மனை வழிபட்டனா்.