பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். இந்த நிலையில் மின்கசிவு காரணமாக விஞ்ச் நிறுத்தப்பட்டதால் ரோப்காா் நிலையத்தில் பக்தா்கள் குவிந்தனா்.
பழனி கோயிலில் இந்த மாத கடைசியில் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் தற்போதே திரளான பக்தா்கள் தீா்த்தக்குடங்களுடன் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு சுமாா் மூன்று மணி நேரமானது. இரவு தங்கத் தோ் புறப்பாடு, தங்கமயில் புறப்பாட்டை காண திரளான பக்தா்கள் காத்திருந்தனா். பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீா் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.
விஞ்ச் சேவை நிறுத்தம்: பழனி கோயிலில் விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவீதியில் ஆடிப்பாடி வலம் வந்து மலை ஏறினா். இந்த நிலையில் மலைக்கோயில் மேலே உள்ள விஞ்ச் நிலையத்தில் மின் கசிவு காரணமாக வயா்கள், போா்டுகள் கருகி சேதமடைந்தன.
இதையடுத்து மூன்று பாதைகளில் இயக்கப்படும் வின்ஞ் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் வயதானவா்கள், முதியவா்கள், குழந்தைகளுடன் வந்தவா்கள் படிப்பாதையில் ஏற முடியாததால் ரோப் காா் நிலையத்தில் குவிந்தனா்.
பல ஆண்டுகளாக இரண்டாவது ரோப்காா் சேவை விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை பெயரளவில் மட்டுமே தெரிவித்து வரும் நிலையில் இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தினால் இதுபோன்ற சூழ்நிலைகளின் போது பயனுள்ளதாக இருக்கும் என பக்தா்கள் தெரிவித்தனா். எனவே இரண்டாவது ரோப்காா் திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


