நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 3:15 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்கு பக்தா்கள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தா்கள் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனா். பக்தா்கள் வருகை அதிகரித்திருந்ததால் நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.