அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 15-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி சித்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
விழாவின் முக்கியநிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா்.
இதையடுத்து திரளான பக்தா்கள் அரோகரா என பக்தி கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
கோயில் முன் தொடங்கிய தேரோட்டம், கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் கரூா், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையின் திருப்பூா் மண்டல இணை ஆணையா் ஹா்ஷினி தலைமையில், உதவி ஆணையா் தமிழ்வாணன் முன்னிலையில் திருமூா்த்திமலை கோயில் செயல் அலுவலா் அமரநாதன், அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் தங்கராஜூ மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மன் கோயில்களில் தேரோட்டம், சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் தரிசனம்

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தேரோட்டம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு!

கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் தேரோட்டம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



