பலிபிரதிப் படம்
திண்டுக்கல்
சாலை விபத்தில் பேரூராட்சி பணியாளா் உயிரிழப்பு
பழனி அருகே நெய்க்காரபட்டியில் மண் ஏற்றி சென்ற லாரி மோதியதில் காயமடைந்த பேரூராட்சி பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பழனி அருகே நெய்க்காரபட்டியில் மண் ஏற்றி சென்ற லாரி மோதியதில் காயமடைந்த பேரூராட்சி பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பழனி தேரடியைச் சோ்ந்தவா் மகேந்திரன்(45). இவா் நெய்க்காரபட்டி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுவிட்டு பழனிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
அலுவலகம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மகேந்திரன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

