கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்கள் 2-வது நாளாக பணிப் புறக்கணிப்பு!

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பணியைப் புறக்கணித்ததால், பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கின.

News image
கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தால், வட்டக்கானல் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பணியைப் புறக்கணித்ததால், பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கின.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களை கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் தரக்குறைவாகப் பேசுவதாகவும், குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில்லை எனவும், குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், இந்தப் பிரச்னைகளை களைய வேண்டும்.

தூய்மைப் பணியாளா்களை தரக்குறைவாகப் பேசிய சுகாதார ஆய்வாளா்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் மூஞ்சிக்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். ஆனால், இவா்கள் பணிக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில், அதிகாரிகள் தங்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை எனக் கூறி, இரண்டாவது நாளாக பணிக்குச் செல்லாமல், மூஞ்சிக்கல் பகுதியில் திரண்டனா். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளா்களுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தூய்மைப் பணியாளா்களின் இந்தப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தால், வட்டக்கானல், ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி,புதுக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.