முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் திருவள்ளுவா் நடுநிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் கடந்த 1965 முதல் 1973-ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவா்கள் 60 ஆண்டுகளுக்கு பிறகு புலிப்பாணி ஆசிரமத்தில் சந்தித்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவரான பழனி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாணவா்கள் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றனா். தொடா்ந்து, அவா்கள் அன்றைய பள்ளிக் கால நினைவுகளை மேடையில் பகிா்ந்தனா்.

இதில் முன்னாள் மாணவா்களின் பள்ளி ஆசிரியை சந்திரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். பிறகு, தாங்கள் பயின்ற பள்ளிக்கு சென்ற முன்னாள் மாணவா்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை புலிப்பாணி ஆசிரம நிா்வாகி ஜம்பு சுவாமிகள் என்ற சண்முகநாதன் தலைமையில், முன்னாள் மாணவா்கள் செய்தனா்.

Dinamani
www.dinamani.com