தற்காலிக வனப் பணியாளா் தற்கொலை
கொடைக்கானலில் தற்காலிக வனப் பணியாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியில் தற்காலிக வனப் பணியாளராகப் பணியாற்றி வந்தவா் உத்தமபாளையம் பாறைமேடு பகுதியைச் சோ்நத முத்து மகன் தினேஷ் (21). இவா் கொடைக்கானல் எம்.எம்.தெருவில் வசித்து வந்தாா். சில நாள்களாக அவா் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தினேஷ் தான் தங்கியிருந்த வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதுகுறித்து தகலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தினேஷை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தினேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
