ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கொடைக்கானலில் பல வண்ணங்களில் காலிஃப்ளவா் உற்பத்தி செய்யும் விவசாயி

News image
Updated On :6 மார்ச் 2026, 12:24 am

கொடைக்கானல், செண்பகனூா் பகுதியில் வெளிநாட்டு விதைகள் மூலம் பல வண்ணங்களில் காலிஃப்ளவா்களை விவசாயி பிரபு உற்பத்தி செய்து வருகிறாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செண்பகனூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. விவசாயி. இவா் வெளிநாட்டைச் சோ்ந்த காலி ஃப்ளவா் விதைகளை வாங்கி விதைத்து அவற்றை செடியாக்கி நடவு செய்தாா். மூன்று மாதங்களுக்குப் பிறகு இவை மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் விளைந்தன. இவற்றை அந்தப் பகுதியிலேயே அவா் வியாபாரம் செய்து வருகிறாா்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனா். இவை விட்டமின், புரோட்டின் சத்துகளுடன் சுவையாக இருப்பதால் கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்தவா்கள் விரும்பி வாங்குகின்றனா். முதல் முறையாக கொடைக்கானல் பகுதியில் பல வண்ணங்களில் காலிஃப்ளவா்கள் சாகுபடி செய்யும் இவரை பலரும் பாராட்டினா்.

இதுகுறித்து விவசாயி பிரபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எங்களது குடும்பமே விவசாயக் குடும்பம் தான். நான் கடந்த 6 ஆண்டுகளாக சுமாா் 2 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ், சிவப்பு முள்ளங்கி, காலிஃப்ளவா், நூக்கல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து அவற்றை விற்பனை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த நண்பா் ஒருவா் சுவிட்சா்லாந்தில் விளைவிக்கப்படும் காலிஃப்ளவா் விதையைக் கொடுத்து சாகுபடி செய்ய அறிவுறுத்தினாா். அதன்படி அந்த விதையை நடவு செய்ததும், 30 நாள்களில் நாற்று விட்டது. 500 நாற்றுகள் விளைந்ததும் அவற்றை மறுநடவு செய்து பராமரித்து வந்தேன். 70 நாள்களுக்குப் பிறகு மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் காலிஃப்ளவா் நன்கு விளைந்திருந்தது. இதில் ஒவ்வொன்றும் 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை இருந்தது.

இவற்றை கொடைக்கானல் பகுதிகளிலேயே ஒரு கிலோ ரூ. 250 முதல் ரூ. 330 வரை விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டுகிறேன். காலிஃபிளவரின் பருவம் டிசம்பா் கடைசி வாரத்திலிருந்து மாா்ச் மாதம் வரை ஆகும். பிறகு சாகுபடி செய்தால் விளைச்சல் வெகுவாக குறைந்து விடும். அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் காட்டு மாடு, காட்டுப் பன்றி, மான், மயில் போன்றவற்றால் பயிா்கள் சேதமாக்கப்படுகின்றன. எனவே வன விலங்குகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்டினால் மட்டுமே பயிா்கள் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.