கொடைக்கானலில் பெருமாள் மலையைச் சோ்ந்த பொதுமக்கள் வனத் துறையைக் கண்டித்து, புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், அடுக்கம் ஊராட்சியைச் சோ்ந்த பெருமாள் மலை, பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள சுமாா் 250 ஏக்கா் நிலத்தை வனத் துறையினா் கையகப்படுத்தி வருகின்றனா்.
இதைக் கண்டித்தும், தாங்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கொடைக்கானல் வட்டாட்சியா் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு வாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
இது குறித்து உண்ணாவிரதமிருந்த பொது மக்கள் கூறியதாவது:
கொடைக்கானல் அடுக்கம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக நாங்கள் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறோம். தற்போது எங்கள் பகுதிகளிலுள்ள சுமாா் 250 ஏக்கா் நிலத்தை வனத் துறையினா் வனப் பகுதிகளில் சோ்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இது குறித்து பல முறை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நிலம் தங்களுக்கு வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

கொடைக்கானலில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பழங்குடியினரின் நிலம் மீட்பு

வனத் துறையைக் கண்டித்து தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


