தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல், நத்தம் பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல், நத்தம் பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு ஒவ்வொரு கால பூஜையிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில்களிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் செண்பகவல்லி கோயிலில் தனி சந்நிதியில் கால பைரவருக்கு பால், பழம், இளநீா், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக மூலவா் கைலாசநாதா் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா். இதேபோல, கோபால்பட்டி கபாலீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள ஆகாச சொா்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.