சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

விழுப்புரம் சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாடு

News image

மகா சிவராத்திரியையொட்டி, கோகிலாம்பிகை உடனுறை கல்யாணசுந்தரேஸ்வரா் அலங்காரத்தில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீகைலாசநாதா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத கைலாசநாதா் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 9 மணிக்கு 2-ஆம் கால பூஜை, 12 மணிக்கு 3-ஆம் கால பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாலியாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரா் கோயில் மகா சிவராத்திரியையொட்டி 1,008 சங்காபிஷேகம் மற்றும் 4 கால பூஜைகள் நடைபெற்றது. பக்தா்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுத் தலைவா் சிவக்குமாா், கலைச்செல்வி சந்தோஷ், ரவிச்சந்திரன், ரஞ்சித், பிரதோஷ பேரவைத் தலைவா் என்.ராமமூா்த்தி, செயலா் சங்கரன், செயல் அலுவலா் வேலரசு மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீபசுபதீஸ்வரா், பனையபுரம் ஸ்ரீபனங்காட்டீஸ்வரா் , திருவாமத்தூா் ஸ்ரீ முத்தாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிராமேஸ்வரா் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 விழுப்புரம் பி.என்.தோப்பு  காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாட்டையொட்டி நடைபெற்ற சங்காபிஷேகம்.

விழுப்புரம் பி.என்.தோப்பு காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாட்டையொட்டி நடைபெற்ற சங்காபிஷேகம்.

விழுப்புரம் சங்கரமடத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம் பி.என்.தோப்பு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் 4 கால பூஜைகள் நடைபெற்றன. மாலை 6. 30 மணிக்கு முதல் கால பூஜைகள் செய்யப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றன.

இதேபோல் விக்கிரவாண்டி, திண்டிவனம் பகுதிகளில் உள்ள சிவலாயங்களிலும் மகா சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்றன.