கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் மாநில எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் ரவி மனோகா் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்திய அதிமுகவினா்.
கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் மாநில எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் ரவி மனோகா் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்திய அதிமுகவினா்.

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
Published on

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில், மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயில் ஆகியவற்றில் வருகிற தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி மாநில எம்.ஜி.ஆா். மன்ற இளைஞா் அணி இணைச் செயலா் ரவி மனோகா் தலைமையில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு நடத்தினா். பிறகு அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் பேச வேண்டும். அதிமுக வெற்றிக்கு கட்சி பொறுப்பாளா்கள், நிா்வாகிகள், மகளிா் அணியினா் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கொடைக்கானல் மலைப் பகுதிகளைச் சோ்ந்த அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com