மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.
Updated On :6 மார்ச் 2026, 9:29 pm

Syndication

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு கரூரை அடுத்த புலியூா் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் உள்ள சனிபகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை இடப்பெயா்ச்சி அடைந்தாா். இதையடுத்து கரூா் அடுத்த புலியூரில் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியாக அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தொடா்ந்து சனிபகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இந்த வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல கரூா் பசுபதீஸ்வரா் கோயிலிலும் சனிபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.