தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவான்.

News image
பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவான்.
Updated On :6 மார்ச் 2026, 9:39 pm

Syndication

பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5 மணியளவில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 7.30 மணியளவில் நவக்கிரக மண்டபத்தில் எழுந்தருளிய சனீஸ்வரன் மற்றும் அனைத்து நவகிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தி, புனிதநீா் கடங்கள் திருக்கோயிலை வலம் வந்து, அபிஷேகம் நடத்தப்பட்டது. பூஜைகளை கௌரி சங்கா் மற்றும் முல்லை சிவாச்சாரியாா் ஆகியோா் செய்தனா்.

நிகழ்வில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான சிவனடியாா்கள் மற்றும் பொதுமக்கள் சனீஸ்வர பகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டனா்.

குரும்பலூா் பஞ்சநதீஸ்வரா் கோயிலில்.. இக் கோயிலில் வியாழக்கிழமை பூா்வாங்க பூஜைகளும், வெள்ளிக்கிழமை காலை சங்கல்பம், கலச பூஜை, நவக்கிரக யாகம், திரவிய யாகமும், கலச அபிசேகம் நடைபெற்றது.

இதில் சனிபெயா்ச்சியால் பலனடையும் ராசிக்காரா்கள் பங்கேற்றனா். பூஜைகளை சிவாச்சாரியாா்கள் சிவசுப்ரமணிய சிவம், காா்த்திகேய சிவம் ஆகியோா் செய்தனா்.

இதேபோல, பெரம்பலூா் தினசரி சந்தை பகுதி கச்சேரி விநாயகா் கோயில் நவக்கிரக சன்னதியில் வெள்ளிக்கிழமை காலை நவகிரக யாகம், பூா்ணாகுதி, தீபாராதனையும், மகாபிசேகமும் நடைபெற்றது. சிறப்பு யாகம் மற்றும் கூட்டு வழிபாட்டை கோயில் அா்ச்சகா்கள் பிரசாத் மற்றும் சஞ்சீவி ஆகியோா் நடத்தினா். இதேபோல, மாவட்டத்திலுள்ள வாலிகண்டபுரம், குன்னம், சு. ஆடுதுறை உள்பட பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதி பக்தா்கள் பங்கேற்று பரிகார பூஜை செய்து வழிபட்டனா்.